1.3 அவ்வையாரின்
191-ஆம்
பாடல் கருத்துகள்
புறநானூறு
பற்றி நாம்
இன்று இந்த
வகுப்பில்
படிக்கப் போகிறோம்.
குறிப்பாக
புறம் 191-ஆம்
பாடல். இந்தப்
பாடலை அவ்வையார்
பாடியிருக்காங்க.
பொதுவாக
நீங்கள் எவ்வளவு
நாள் உயிரோடிருப்பீங்க
என்று சொல்ல
முடியுமா?
உங்களுக்கு?
எவ்வளவு
நாள் இருப்பீங்க
உயிரோட, தெரியுமா?
உங்களுக்கு?
யாரும்
சொல்ல முடியாது.
எவ்வளவு
நாளைக்கு என்னோட
இளமை இருக்கும்மென்று
யாரும் சொல்ல
முடியாது.
அந்த
நிலையாமைப்
பற்றிப் பேசுவதற்கு
காஞ்சி என்று
பெயர். காஞ்சி
என்றால் வாழ்க்கை
நிலையில்லாதது;
வாழ்கிற
காலத்தில்
இருக்கிற காலத்தில்
நாம் நன்றாக
வாழ்ந்துவிட்டு
போகனும்.
என்பதைத்
தான்.
இந்த
இலக்கியங்கள்,
குறிப்பாக
சங்க இலக்கியங்கள்
நமக்கு உணர்த்துகின்றன.
அதாவது
இலக்கியங்கள்
சமகால வாழ்க்கையைப்
பிரதிபலிக்கக்கூடிய
கண்ணாடி என்று
சொல்லப்படும்.
அவ்வகையில்,
இந்த
பாடல் அவர்பாடிய.
191-வது பாடல்,
பொதுவான
ஒரு வாழ்க்கை
அறத்தைப் பற்றிப்
பேசக்கூடிய
பாடல். குறிப்பாக
அதற்குள் என்ன
பேசப்படுகிறது
என்றால்,
நிலையாமைப்
பற்றி பேசுகிறது.
இந்தப்
பாடல் கருத்து
என்னவென்றால்,
பிரசிராந்தையார்
என்னும் புலவர்
கோப்பெருஞ்சோழன்
என்கிற மன்னனோடு
நல்ல உறவு
கொண்டிருந்தார்.
திடீரென்று
கோப்பெருஞ்சோழன்
ஒரு போரில்
தோற்றுவிட்டதால்
வடக்கு திசையை
நோக்கி உட்கார்ந்து
தவம் இருந்து,
பட்டினியிருந்து
இறந்துபோய்விடுகிறான்.
ஏனென்றால்,
அந்தக்
காலத்தில் மரபு
அது, புறம்
முதுகிட்டு
ஓடினாலோ அல்லது
ஒரு மன்னன்
போரில் தோற்றாலோ
வெட்கப்பட்டு
நாணி, குறுகி
வடதிசையை நோக்கி,
(வடதிசை
என்றால் -
வடதிசையில்தான்
பெரிய முனிவர்களெல்லாம்
இருக்கிறார்கள்
என்று அர்த்தம்.
மால்வரை
தெய்வம்னு
சொல்லுவார்கள்.
இமய மலையில்
இருக்கிறார்கள்
என்று அர்த்தம்.)
அமர்ந்து
இறந்துபோய்விடுவார்கள்.
அப்படி
இறந்துபோனார்
கோப்பெருஞ்சொழன்
அதற்கு புலவர்களெல்லாம்
வருகிறார்கள்.
நிறைய
வாரி வழங்கக்கூடிய
வள்ளலாக கோப்பெருஞ்சொழன்
இருந்திருக்கிறார்.
கேள்விப்பட்டு
பிசிராந்தையார்
அங்கு வருகிறார்.
ஏன்
அவருக்கு
பிசிராந்தையார்,
என்ற
பெயரென்றால்
பிசிர் என்பது
ஒரு ஊர். அந்தக்
காலத்தில் மனித
உறுப்புகளை
உருவகப்படுத்தி
ஆந்தையார்,
கண்ணனார்,
சிவப்பனார்,
கருப்பனார்
என்று பெயர்
வைக்கிற மரபு
இருந்தது.
அவர்
ஆந்தைப் போன்ற
கண்களை உடையவராக
இருந்ததால்
ஆந்தையார் என்று
அழைக்கப்பட்டார்.
அவ்வகையில்
பிசிராந்தையார்
இந்த பாட்டை
எழுதியிருக்கிறார்.
அப்பொழுது
அந்தப் புலவரிடம்
கேட்கிறார்கள்.
இவ்வளவு
வயது ஆயிடுச்சு
எங்களைவிட
வயசாயிடுச்சு,
உங்க தலை
கொஞ்சங்கூட
நரைக்கவில்லையே.
இவ்வளவு
இளமையாய்
இருக்கீங்களே,
எப்படி,
அதுக்கு
என்ன காரணம்.
நாங்கலெல்லாம்
இந்த வயதில்
இப்படி ஆயிட்டோமே
என்று சொல்கிறார்கள்.
அதற்கு
அவர் சொல்கிறார்.
என்ன
சொல்கிறார்
என்றால்,
“யாண்டுபல
வாக நரையில
ஆகுதல்
யாங்கு
ஆகியர் என வினவுதிர்
ஆயின்
மாண்டஎன்
மனைவியடு மக்களும்
நிரம்பினர்
யான்கண்
டனையர்என்
இளையரும் வேந்தனும்
அல்லவை
செய்யான் காக்கும்
அதன்தலை
ஆன்று
அவிந்து அடங்கிய
கொள்கைச்
சான்றோர்
பலர்யான் வாழும்
ஊரே”
இந்த
யாண்டு என்பது
ஆண்டு. சங்க
காலத்தில் ஆண்டு
என்று சொல்கிற
வழக்கமில்லை
சங்க காலத்தில்
யாண்டு என்று
சொல்லுவார்கள்.
இவ்வளவு
காலமாகிபோச்சே
நரையே உனக்கு
வரவில்லை.
அப்படினு
கேட்குறாங்க!
“மாண்ட
என் மனைவியோடு
மக்களும் நிரம்பினர்.”
மாண்ட
என் மனைவியோடு
என்றால் இறந்துப்போன
மனைவி என்பது
பொருளல்ல மாண்புமிகு
என்று சொல்றோமல்லவா,
மாண்பு
ஒரு நல்ல திடாகாத்திரமான,
ஆரோக்கியமான,
அன்பைப்
பொழிகிற ஒரு
மனைவி. அப்படி
ஒரு மனைவி எனக்கு
வாய்த்திருக்கிறாள்,
“மக்களும்
நிரம்பினர்.”
மக்களும்
என்பது பொதுமக்களை
குறிப்பது அல்ல,
மக்கள்
என்றால் தான்
பெற்ற பிள்ளைகளைக்
குறிப்பது.
மக்களும்,
அதாவது
அன்பான, அழகான,
நான்
நினைக்கிறதை
நான் செய்ய
வேண்டுமென்று
நினைக்கிறதை,
செய்யக்கூடிய
ஒரு மனைவி,
என்னைப்போலவே
என்னுடைய குணங்களைக்
கொண்ட மக்கள்
- பிள்ளைகள்
எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.
இரண்டாவது,
என்னுடைய
ஏவலர்-எல்லாம்
நான் என்ன
நினைக்கிறேனோ
அதை அப்படியே
செய்துவிடுவார்கள்.
நினைக்கிறதுக்கு
முன்னாடி
செய்திடுவார்கள்.
என் உள்
எண்ணம் அறிந்து
செயல்படுகிற
வேலைக்காரர்கள்,
அதற்கடுத்து
என் நாட்டை
ஆட்சி செய்கிற
மன்னன் இருக்கான்
பாருங்க அவன்
மக்களுக்கு
நன்மையைத் தவிர
வேறெதுவும்
செய்யாத ஒரு
சிறந்த அரசனாக
இருக்கிறான்.
அதுவல்லாமல்,
நான்
இருக்கிற,
வாழ்கிற
ஊர் பிசிர்.
என் ஊரைச்
சுற்றி கற்றறிந்த
சான்றோர்கள்,
கொள்கைச்
சான்றோர்கள்
என்று சொல்லப்படுகிறது.
சான்றோர்
என்றாலே பெரிய
ஆட்கள், கொள்கை
சான்றோர்கள்
என்றால் மிகச்
சிறந்த நற்குணங்களை
உடைய கற்றறிந்த
சான்றோர் அந்தச்
சான்றோர்கள்
எல்லாம் என்னுடைய
குடியிருப்பைச்
சுற்றி குடியிருக்கிறார்கள்.
அதற்கிடையில்
தான் நான்
குடியிருக்கிறேன்.
அதனால்
தான் எனக்கு
எந்த மனக் கவலையும்
இல்லை, வாழ்க்கையைப்
பற்றி பயமுமில்லை,
அதனால்
என்னுடைய மனம்
அமைதியாக இருக்கிறது.
என்னுடைய
வாழ்க்கைச்
செழுமையாக
இருக்கிறது.
அதனால்தான்
நான் இளமையாக
இருக்கிறேன்.
இன்னும்
எனக்கு நரையே
வரவில்லை என்று
சொல்கிறார்.
சரி இந்த
பாடல்ல உங்களுக்கு
ஏதாவது வினா
(னிuமீstவீஷீஸீs)
இருக்கா.
ஏதாவது
இருந்தா கேட்கலாம்?
2.2 பாடல்
கருத்துக்கள்:
இந்தப்
பாடல் வாழ்க்கையினுடைய
நிலையமையைப்
பற்றி, வாழ்க்கையினுடைய
பொருள், செல்வம்
எதுவுமே நிலையில்லை.
அதனால்
முடிந்த வரை
நீங்கள் எல்லாரும்
சாம்பாதிக்கிறதில்
மற்றவங்களுக்கு
கொஞ்சம் கொடுத்து
சந்தோஷப்படுத்துங்க
என்பது மாதிரி
இந்த பாடல்
கருத்து அமைகிறது.
பொருள்
நிலையமையைப்
பற்றி பாடுது.
இந்த
பாடலை பார்க்கலாம்.
‘தெண்கடல்
வாளகம் அப்படியென்றால்
என்ன? தெண்
கடல் என்றால்
என்ன? தெற்கே
இருக்கிற கடலா?
தெண்கடல்,
தென்கடல்
இரண்டுக்கும்
என்ன பொருள்
வேறுபாடு?
ஏதாவது
உங்களுக்குத்
தெரியுமா?
தெண்-இதை
அழுத்தி உச்சரிப்போம்.
தென்-இதை
இயல்பாக உச்சரிப்போம்.
தண்மை
பொருந்திய நீர்
தான் தண்ணீர்.
தமிழில்
இயல்பாக நீர்
என்று சொல்லலாம்.
தண்மை
பொருந்திய.
தண்மை
என்றால் என்ன
குளிர்ச்சி,
ஏன் வெந்நீர்னு
சொல்றோம்?
வெம்மை
பொருந்திய நீர்
வெந்நீர்.
அது மாதிரி
தெண்கடல் என்றால்
தெளிந்த நீரையுடைய
கடல்.
அந்தத்
தெளிந்த நீரையுடைய
கடல் சூழ்ந்த
இந்த ஒட்டுமொத்த
உலகத்தையும்
தான் ஒருவனே
ஆட்சி செய்கிற,
வெண்கொற்றைக்
குடையின்கீழ்
ஆட்சி செய்கிற,
வெண்கொற்றைக்
குடைன்னா நீங்க
இப்ப திருவிழாக்களில்
சாமிக்கு மேல
குடை பிடித்துக்கொண்டு
வருவதைப்
பார்த்திருப்பீர்கள்.
அம்பாரி
என்று சொல்வார்கள்.
குறிப்பாக
அந்தப் பழக்கம்
எப்படி வந்தது
என்றால்,
அந்தக்
காலத்தில்
சாமிகள் தெருவில்
ஊர்வலம் வருகிற
பழக்கம் இல்லை.
மன்னர்கள்
ஆண்டுக்கு ஒரு
முறையோ அல்லது
ஆறு மாதத்திற்கு
ஒரு முறையோ
தெருவில் வலம்
வருகிற பழக்கம்
இருந்தது.
மன்னன்
வரும்போது
மன்னன் மேல்
ஒரு குடை பிடித்துக்கொண்டு
வருவார்கள்.
குறிப்பாக
அந்தக் குடையில்
அழுக்குப்
பட்டாலோ அல்லது
குடை கிழிந்தாலோ
அல்லது குடை
சாய்ந்தாலோ
மன்னனது ஆட்சிக்கு
ஆபத்து வந்துவிட்டதாகப்
பொருள். அதன்
அடிப்படையில்தான்
தற்போது கோட்டையில்
பாத்தீர்களென்றால்
சாயங்காலம்
கொடியை கீழே
இறக்கிடுவார்கள்.
கூனென்றால்
இரவில் யார்
கொடி பறக்கிறதென்று
தெரியாது.
இங்கிலீஷ்காரன்
கொடி பறக்குதா?
தமிழன்
கொடி பறக்குதானு
தெரியாது.
இல்ல வேற
எவன் கொடி பறக்கிறது
என்றும் தெரியாது!
அது மரபு
அதனால் தான்
வெண்கொற்றைக்
குடையை வைத்துக்கொண்டு
இந்த ஒட்டுமொத்த
உலகத்தை ஆளக்கூடிய
அரசனாக இருந்தாலும்
அல்லது நடுநாள்’னா
நேரம் காலம்
பார்க்காமல்
‘நடுநாள் யாமத்து
பகலும் துஞ்சான்.’
ராத்திரியும்
தூங்குவதில்லை
பகலிலும்
தூங்குவதில்லை
ஏனென்றால்?
தூங்கினால்
வேட்டையாட
முடியாது.
எந்த
நேரத்தில் எந்த
விலங்கு வரும்
என்ன பண்ணும்
என்று சொல்ல
முடியாது.
காத்துக்கிட்டே
இருப்பான்
வேட்டையாடுவதற்கு.
அப்படி
இருக்கிற ஒரு
கல்லாத வேடனாக
இருந்தாலும்.
உண்பது
நாழி அளவான
உணவு.
மனிதர்களும்
எவ்வளவு பெரிய
வயிறாக இருந்தாலும்
32 கவலத்துக்கு
மேல் சாப்பிட
முடியாது.
32-தான்
இப்பொழுது நாம்
சாப்விடுவது
குறைந்த பட்சம்
15 அல்லது
16 கவலம்தான்.
எவ்வளவு
பெரிய அரசனாகட்டும்
ஆண்டியாகட்டும்
ஏழையாகட்டும்,
வேடநாகட்டும்
கல்லாத மூடநாக
இருந்தாலும்
அவன் உண்பது
நாழி அளவான
உணவு.
உண்பது
நாழி அளவான உணவு
உடுப்பது
இரண்டு
மேலே
ஒரு ஆடை கீழே
ஒரு ஆடை. பணக்காரன்
என்பதற்காக
கீழே பத்தாடைகளைக்
கட்ட முடியாது.
ஊழை என்பதற்காக
உடை இல்லாமலும்
போவதுகிடையாது.
ஏழை கோவனம்
கட்டுவான் மேலே
ஒரு துண்டு
போடுவான்.
ஒவ்வொரு
நாட்டின் சூழலுக்கேற்ப
உடை மாறுபடும்.
நாம்
எல்லாம் வெப்ப
நாட்டில் இருக்கிறோம்
அதற்கேற்ற உடை
அணிகிறோம்.
அதுமாதிரி
உண்பது நாழியளவு
உணவு உடுத்துவது
இரண்டு ஆடைதான்.
மற்ற
எல்லாத் தேவைப்பாடுகளும்
எல்லா மனிதர்களுக்கும்
கிட்டத்திட்ட
அப்படித்தான்
இருக்கும்.
கொஞ்சம்
விலை உயர்ந்ததைப்
பணக்காரன்
போடுவான்.
ஏழை விலை
குறைவானதைப்
போடுவான்.
அந்த
மாதிரி பிற
அனைத்தும்
எல்லோர்க்கும்
ஒன்றாகவே இருக்கும்.
அதனால்
பணம் இருக்குங்கிறதுக்காக
அதிகமாக ஆடக்கூடாது.
பணம்
இல்லாதவன் என்ன
செய்வான் பணம்
இருக்குறவனைப்
பார்த்து என்ன
பண்ணுவான் எந்த
நேரத்தில்
பார்த்து இவனைக்
கொள்ளையடிக்கலாம்,
சூரையாடலாம்
என்ற எண்ணம்தான்
வரும். இந்தியா
போன்ற நாடுகளில்
இன்றைக்கு புதிய
நவீன பொருளாதாரத்தால்
நடுத்தர மக்கள்ளெல்லாம்
பாதிக்கப்படுகிறார்கள்.
ஒருகாலத்தில்
பெரிய சூப்பர்மார்க்கெட்கூடகளைக்
கொள்ளையடிக்கிற
நிலைமைக் கூட
வரலாம். எப்பவும்
பொருள் ஒருவனிடத்திலேயே
சேரக்கூடாது.
அப்படிச்
சேர்ந்தால்
இல்லாதவர்களுக்குக்
கொஞ்சம் கொடுக்கனும்.
அப்படி
கொடுக்காமல்
நான் மட்டும்தான்
அனுபவிப்பேன்
என்றால் அந்தப்
பொருள் உனக்கு
நிலைக்காது
என்பதுதான்
இந்தப்பாடல்
கருத்து.
“தெண்கடல்
வளாகம் பொதுமை
இன்றி
வெண்குடை
நிழற்றிய ஒருமை
யோர்க்கும்
நடுநாள்
யாமத்தும்
பகலும் துஞ்சான்
கடுமாப்
பாக்கும் கல்லா
ஒருவற்கும்
உண்பது
நாழி உடுப்பவை
இரண்டே
பிறவும்
எல்லாம் ஓரொக்
கும்மே
செல்வத்துப்
பயனே ஈதல்
துய்ப்பேம்
எனினே தம்புந
பலவே”
அதனால்
நீங்கள் வாழ்க்கையில்
எந்தப் பெரும்
பொருள் சம்பாதித்தாலும்
அதில் ஒரு பகுதியை
இல்லாதவர்களுக்கு
எளிமையானவர்களுக்கு
ஏழைகளுக்கு,
கொடுத்து
அரவனைத்துச்
சென்றால் நீங்கள்
பணக்காரனாக
இருக்கலாம்.
இல்லையென்றால்
நீண்ட காலத்துக்கு
நிலைக்க முடியாது.
என்பதை
இரண்டாயிரம்
வருஷத்துக்கு
முன்பே தமது
பாடலில் சொல்லிருககிறார்.
அது
இரண்டாயிரம்
வருஷத்துக்கு
முன்பு பொருந்துகிறதோ
இல்லையோ?
இன்றைய
சமுகத்துக்கு
அது பொருந்தும்.
அதனால்
நீங்கள் எல்லாம்
வாழ்க்கையில்
முடிந்த வரை
உங்கள் சம்பாத்தியத்தில்
ஒரு பகுதியை
மற்றவர்களுக்குக்
கொடுத்து உதவுகிற
மனதோடு வாழுங்கள்
என்று கேட்டுக்கொள்றேன்.
சங்க
இலக்கியத்தில்
மிக உன்னத
கருத்துக்கள்,
மிக உயர்ந்த
கருத்துக்கள்
சொல்லப்பட்டிருக்கின்றன.
இலக்கியம்
என்பது மனிதனை
மனிதனாக வாழவைப்பதற்கான
ஒரு கருவி.
அதனால்
இலக்கியம்
என்பது எல்லார்க்கும்
தேவை. சங்க
இலக்கியத்தில்
இது மாதிரி பல
பாடல்கள் இருக்கின்றன.
அந்தப்
பாடல்களைப்
பற்றி அடுத்த
வகுப்பில்
பார்க்கலாம்.
நன்றி.
உங்கள்
முன்னேற்றத்தை
ஆய்ந்தறிக.
குறிப்பு:
(1) உமது
பதிலைக் கீழ்க்காணும்
கோடிட்ட /
வெற்றிடத்திலோ
எழுதுக.
(2) உமது
பதிலைப் பாடப்பகுதியின்
இறுதியில்
கொடுக்கப்பட்டுள்ள
விடைகளோடு
ஒப்பிட்டு அறிக.
இளமையாக
இருப்பதற்கு
பிசிராந்தையார்
கூறிய காரணம்
யாது?
...............................................................................................................................
...............................................................................................................................
2. புறநானூறு
189 ஆம்
பாடல் கருத்து
யாது?
...............................................................................................................................
...............................................................................................................................
தொகுத்தறிவோம்
நீங்கள்
இந்தப் பாடப்பகுதியில்
படித்தவற்றைத்
தொகுத்துக்
காண்போம்.
ஒருவனுக்கு
நல்ல மனைவியும்,
மக்களும்,
அரசனும்
வாழும் ஊரும்
வாய்க்கப்பெற்றால்
அவன் மனஅமைதியோடு
என்றும் இளமையோடு
வாழலாம்.
சங்க
இலக்கியங்கள்
வீரநிலைக்கால
பாடல்களாகும்
பாட்டும்
தொகையும் சங்கம்
இலக்கியம் என்று
வழங்கப்படுகின்றன.
பொருள்
நிலையில்லாதது,
பெரும்
பொருள் ஈட்டுபவர்கள்
அதில் ஒரு பகுதியை
இல்லாதவர்களுக்கும்,
ஏழைகளுக்கும்
கொடுத்து அரவணைத்துச்
செல்லவேண்டும்.
அதன்
மூலம் தானும்
மகிழ்ந்து
பிறரையும்
மகிழ்விக்க
முடியும்.
உங்கள்
முன்னேற்றத்தை
ஆய்ந்தறிய
உதவும் வினாக்ளுக்கான
விடைகள்
1.எனக்கு
நல்ல மனைவியும்
மக்களும் அரசனும்
ஏவலர்களும்
ஊரும் வாய்க்கப்
பெற்றதால் நான்
இளமையாக இருக்கிறேன்
என்றார்.
2.இந்த
உலகையே ஆளும்
அரசனாக இருந்தாலும்,
வேட்டையையே
தொழிலாக உடைய
கல்லாத மூடனாக
இருந்தாலும்
உண்பது நாழி,
உடுப்பவை
இரண்டே என்றும்.
அதனால்
தம் பொருளில்
ஒரு சிறுபகுதியையாவது
மற்றவர்களுக்கு
கொடுக்க வேண்டும்
என்றும் கூறுகிறார்.
தேர்வுக்கான
மாதிரிரி வினா
1.புறநானூறு
191-ஆவது
பாடல் கருத்துக்களை
விளக்கியுரைக்க.
Home